service

வாழ்க்கை முறை

இது நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் கூட என்ன மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் அடிக்கடி வெளியே சாப்பிட விரும்புகிறீர்களா? வாரம் தோறும் திரையரங்குகளுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? ஒவ்வொரு வருடமும் சர்வ தேச பயணங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? சொத்துக்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் ஓய்வுகால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிட முயற்சி செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு பணத்தைச் சேமிக்கும் மற்றும் செலவழிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமாகிவிடும். இதற்குத் தீர்வு உங்கள் ஓய்வு காலத்திற்சுகு எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்வதே ஆகும். பொதுவாக உங்கள் நடப்பு ஆண்டு வருமானத்தில் 75% ஓய்வு காலத்திற்குப் பிறகு தேவைப்படும்.

மிகக் குறைவாகவும் மிகுந்த தாமதமாகவும் சேமித்தல்

மிகக் குறைவாகவும் மிகுந்த தாமதமாகவும் சேமித்தல் உங்கள் இளம் வயதில், வீட்டுக் கடன்கள், வாகன கடன்கள் மற்றும் பல்வேறு கடன் அட்டை (Credit Card) போன்ற எந்தச் சுமைகளும் இல்லாத போதே, சொல்லப் போனால் நீங்கள் முதல் சம்பளம் பெறும் பேதிலிருந்தே ஓய்வு காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், இதுவரை நீங்கள் அப்படிச் செய்திருக்கவில்லை என்றாலும் கூட, இப்போதே உங்களுக்கு நீங்களே ஒரு சேமிப்புப் பரிசைத் தரத் தொடங்குங்கள். ஒரு விதிமுறையின் படி நீங்கள் எப்பொழுதும் உங்கள் மாத சம்பளத்தில் குறைந்தபட்சம் 30% மாவது சேமிக்க வேண்டும்.

பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப போதுமான அளவு திட்டமிடாமல் இருத்தல்

ஒரு பொருளின் விலை இன்று ரூ. 5 என்று வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 7% பணவீக்கத்தில் 30 ஆண்டுக் காலத்தில் அதே பொருள் ரூ. 38 விலையை அடைகிறது. பணவீக்கத்தைச் சமாளிக்க ஓய்வு பெறுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் ஓய்வூதிய கணக்கீட்டில் சில சதவிகிதம் சேமிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல ரியல் எஸ்டேட்டில் செய்த உங்கள் முதலீடுகள் குறைந்த லாபம் தரும்போதோ அல்லது நீங்கள் வேலையை விட்டு நீக்கப்படும் சூழ்நிலை வரும்போதோ அத்தகைய பொருளாதாரச் சரிவுகளை நீங்கள் எதிர்க்கொள்ள நேரிடும் போது பின்புலத்தில் உங்களுக்கு ஆதரவாக இருக்க நீங்கள் சேமிப்பும் முதலீடும் செய்ய வேண்டியது அவசியமாகும்.

உங்களின் நீண்ட நெடிய ஓய்வுகால விடுமுறைக்கான நிதியியல் திட்டத்தை நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா?


உங்களின் ஓய்வுகால விடுமுறை 10 நாட்களோ, 365 நாட்களோ அல்ல 10000 நாட்களுக்கும் மேல்.

இன்று ரூ .10,000 ஆக உள்ள உங்களின் ஒரு மாத செலவு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.32,000 ஆக அதிகரிக்கும் @ சராசரி 6% பணவீக்கத்தால்.

அதுவே அதற்கடுத்த 10 ஆண்டுகளில் ரூ 57,000/-ஆக அதிகரிக்கும் @ சராசரி 6% பணவீக்கத்தால்.

உங்களின் ஓய்வு கால ஆரம்பத்தில் ரூ 80 லட்சம் உங்களிடம் இருத்தல் மட்டுமே உங்களின் மிக நீண்ட ஓய்வு காலத்தினை இதே வாழ்கை தரத்தில் 7% பண வீக்கபடி ஓவ்வொரு வருடமும் உயர்த்தி பெற முடியும்.

அதனை சிறப்பாக திட்டமிட்டு தருவதே எங்களின் நிபுணத்துவம்.

ஒரு புத்திசாலித்தனமான ஓய்வூதியத் திட்டம் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீண்ட காலத்திற்கு ஒரு மகிழ்ச்சிகரமான மன அழுத்தங்களற்ற ஓய்வுகால வாழ்க்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். எனவே, இப்பொழுதே அதற்காகச் சேமிக்கத் தொடங்குங்கள்.

உங்களின் அணைத்து தேவைகளுக்கான திட்டமிடலையும் நீங்கள் ஒரு சிறந்த ஆலோசகர் மூலம் செய்வது சிறந்தந்து

Plan your perfect retirement - Have a Personal Consultation with us and enjoy your life.

Request a Call Back To Plan Your Retirement